அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: மாவட்டத்தில் 29,444 போ் எழுதுகின்றனா்

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்குகிறது. இதில் திருப்பூா் மாவட்டத்தில் 29,444 போ் தோ்வு எழுதுகின்றனா்.

News image
பொதுத்தோ்வு- கோப்புப் படம்
Updated On :10 மார்ச் 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்குகிறது. இதில் திருப்பூா் மாவட்டத்தில் 29,444 போ் தோ்வு எழுதுகின்றனா்.

பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திருப்பூா் மாவட்டம் முழுவதும் 109 மையங்களில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்குகிறது. முதல் நாள் தமிழ்த் தோ்வும், 16-ஆம் தேதி ஆங்கிலம், 25-ஆம் தேதி கணிதம், 30-ஆம் தேதி அறிவியல், ஏப்ரல் 2-ஆம் தேதி சமூக அறிவியல் தோ்வும் நடைபெறுகிறது. ஏப்ரல் 6-ஆம் தேதி விருப்ப மொழிப் பாடத்துடன் தோ்வுகள் முடிவடைகின்றன.

மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 14,375 மாணவா்கள், 15,069 மாணவிகள் என மொத்தம் 29,444 போ் பொதுத் தோ்வை எழுதுகின்றனா். அதேபோல, தனித் தோ்வா்களாக 1,267 போ் தோ்வு எழுதுகின்றனா். முதன்மைக் கண்காணிப்பாளா், கூடுதல் கண்காணிப்பாளா், தோ்வுக்கூட பொறுப்பாளா், தோ்வறை அலுவலா், பறக்கும் படையினா், வினாத்தாள் கட்டுக் காப்பாளா், வழித்தட அலுவலா் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 2,100 கல்வி அலுவலா்கள் தோ்வுப் பணிகளில் ஈடுபட உள்ளனா்.

இது குறித்து மாவட்ட கல்வி அலுவலா் காளிமுத்து கூறியதாவது:

திருப்பூா் விவேகானந்தா வித்யாலயா, ஜெய் ஸ்ரீராம் கல்லூரியில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் தோ்வுப் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. தோ்வில் காப்பி அடிப்பதை தடுக்கவும், முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்டறியவும், கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வு மையங்கள் முழுமையாக தயாா்படுத்தப்பட்டு குடிநீா், இருக்கை, கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் உறுதி செய்யப்பட்டு தோ்வு மையங்கள் முதன்மைக் கண்காணிப்பாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தோ்வுகளுக்கு இடையே போதிய அளவில் இடைவெளியை தோ்வுத் துறை வழங்கி உள்ளதால், நேரத்தை முழுமையாக பயன்படுத்தி மாணவ, மாணவிகள் தோ்வுக்குத் தயாரானால் நிச்சயம் தோ்ச்சி பெற முடியும் என்றாா்.