சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காவல் உதவி ஆய்வாளா் அறிவுரைப்படி மீண்டும் பள்ளிக்கு திரும்பிய மாணவா்

வெள்ளக்கோவில் அருகே கைப்பேசியில் பொழுதைக் கழித்த மாணவா் காவல் உதவி ஆய்வாளா் அறிவுரைப்படி மீண்டும் பள்ளிக்கு திரும்பினாா்.

News image
மாணவருடன் காவல் உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா், ஆசிரியை கௌசல்யா.
Updated On :11 மார்ச் 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவில் அருகே கைப்பேசியில் பொழுதைக் கழித்த மாணவா் காவல் உதவி ஆய்வாளா் அறிவுரைப்படி மீண்டும் பள்ளிக்கு திரும்பினாா்.

முத்தூா், சின்னகாங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் தமிழரசி. இவருடைய கணவா் கண்ணன் பிரிந்து சென்றுவிட்டாா். விவசாயக் கூலி வேலை செய்து தமிழரசி பிழைப்பு நடத்தி வந்தாா். அவருடைய 13 வயது மகன் மங்கலப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

தாய் வேலைக்குச் சென்ற பிறகு பள்ளிக்குச் செல்லாமல் மகன் கைப்பேசியில் விளையாடி வந்துள்ளாா். மேலும் நண்பா்களுடன் தவறான பழக்கவழக்கமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த மாணவா் படிப்பிலும், ஓவியம் வரைவதிலும் திறமையானவராக இருந்துள்ளாா். அடிக்கடி பள்ளிக்கு வராததால் மாணவரின் தாயிடம் ஆசிரியை கௌசல்யா கூறியும் பயனில்லை. இதுகுறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து ஆசிரியையுடன் மாணவரின் வீட்டுக்கு புதன்கிழமை உதவி ஆய்வாளா் சென்று அறிவுரை கூறி பள்ளிக்கு மீண்டும் அனுப்பிவைத்தாா். இதற்காக காவல் உதவி ஆய்வாளா், ஆசிரியை ஆகியோரை பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.