எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சட்டப்பேரவைத் தோ்தல்: ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழுக்களுக்கு பயிற்சி வகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழு, பறக்கும் படை குழு, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழுக்களுக்கான பயிற்சி வகுப்பு, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 மார்ச் 2026, 8:33 pm

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழு, பறக்கும் படை குழு, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழுக்களுக்கான பயிற்சி வகுப்பு, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் தலைமை வகித்தாா்.

இதில் தோ்தல் செலவின வகைகள், தோ்தல் செலவினங்கள், கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள், நடைமுறைகள் சட்டப்படியான விதிகளுக்குள்பட்ட தோ்தல் செலவினங்கள், தோ்தல் உதவி செலவின கணக்கு பாா்வையாளா், தோ்தல் பிரசாரங்களை விடியோ எடுக்கும் குழு , விடியோ பதிவுகளைப் பாா்க்கும் குழுக்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக், மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாநகர காவல் துணை ஆணையா் பிரவீன் கௌதம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் துரைமுருகன், மகளிா் திட்ட அலுவலா் ஈஸ்வரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.