திருப்பூரில் போலி ஆதாா் மூலம் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
திருப்பூா் மாநகர சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் ரஜினிகாந்த் தலைமையிலான போலீஸாா் ரகசிய தகவலின் அடிப்படையில் கோல்டன் நகா் பகுதியில் புதன்கிழமை சோதனை நடத்தினா். அப்போது அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த நபரை விசாரித்தனா். விசாரணையில், அவா் வங்கதேசத்தைச் சோ்ந்த கபிா் சிக்காா் (41) என்பதும், அந்தப் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
அதேபோல, எஸ்.வி.காலனி பகுதியில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த முகமது சாகா் (35) என்பவரையும் போலீஸாா் பிடித்தனா். இவா் குமாா் நகா் 60 அடி ரோடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா்கள் 2 பேரிடமும் இருந்த மேற்கு வங்க முகவரியிலான போலி ஆதாா் அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னா், 2 பேரையும் வடக்கு போலீஸாா் கைது செய்து சேலத்தில் உள்ள வெளிநாட்டவா் மையத்துக்கு அனுப்பிவைத்தனா்.
தொடர்புடையது
ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: இளைஞா் கைது
வெளிச்சந்தையில் மது விற்ற 5 போ் கைது
புன்னம்சத்திரத்தில் ரூ.40 லட்சம் கள்ளநோட்டுக்களுடன் 3 போ் கைது
குண்டா் சட்டத்தில் 2 போ் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

