திருப்பூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
அவிநாசி அருகே ரங்கா நகரில் உரிய ஆவணங்களின்றி வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்று சந்தேகத்தின் அடிப்படையில் இருவரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா்கள் அக்பா்அலி காசா (37), இஸ்லாம் காசா (49) என்பதும், பாஸ்போா்ட் மற்றும் விசா காலாவதியான பின்னா் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வெளிநாடு வாழ் தடை சட்டத்தின் கீழ் இருவரையும் அவிநாசி போலீஸாா் கைது செய்து, சேலம் ஆத்தூா் முகாமுக்கு அனுப்பிவைத்தனா்.
இதேபோல, வேலம்பாளையம் பகுதியிலும் வங்கதேசத்தைச் சோ்ந்த சிலா் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் அங்கு சனிக்கிழமை சென்று போலீஸாா் விசாரித்ததில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த முகமது ஜானி மண்டல் (34), முகமது அபு (36) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 77.01 லட்சம் பறிமுதல்
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.4 கோடி பணம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 73.66 லட்சம் பறிமுதல்
திருப்பூரில் வங்கதேசத்தினா் 2 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


