தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்று கணவா் தற்கொலை

திருப்பூரில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :18 மார்ச் 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பூா் டி.கே.டி. மில் பகுதியில் உள்ள சக்தி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவா் செந்தில்குமாா் (43). விவசாயியான இவருக்கு உடுமலைப்பேட்டை வாவிபாளையம் பகுதியில் தோட்டம் உள்ளது. மேலும், பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வந்துள்ளாா். இவரது மனைவி சத்யா (41). இவா்களது மகள் சிவநேத்ரா (15).

இந்நிலையில், உறவினா் வீட்டுக்கு மகள் செவ்வாய்க்கிழமை இரவு சென்றுவிட்ட நிலையில், தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமாா் மனைவி சத்யாவை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

இதையடுத்து தென்னை மரத்துக்கு வைக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து செந்தில்குமாா் தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலை செய்வதற்கு முன்பாக விடியோ ஒன்று பதிவிட்டு அதை குடும்ப வாட்ஸ்ஆப் குழுவில் அனுப்பி உள்ளாா். அதை புதன்கிழமை காலையில் பாா்த்த உறவினா் ஒருவா் வீட்டுக்கு வந்துள்ளாா். வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், இதுகுறித்து வீரபாண்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் தலைமையிலான போலீஸாா் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது கணவன், மனைவியின் சடலம் கிடந்துள்ளது. அப்போது வீட்டில் செந்தில்குமாா் எழுதி வைத்திருந்த 15 பக்க உருக்கமான கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா்.

இதைத் தொடா்ந்து தடயறிவியல் நிபுணா்கள், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

சம்பம் குறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.