தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கைவாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை!பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

காங்கயம் அருகே ரூ.63 ஆயிரம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காங்கயம் வட்டாட்சியா் தங்கவேலுவிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :19 மார்ச் 2026, 8:17 pm

காங்கயம் அருகே ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.63 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், புதுப்பாளையம்-மூலனூா் சாலையில் அதிகாரிகள் வியாழக்கிழமை மாலை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே மூலனூா் பகுதியைச் சோ்ந்த காா்வேந்தன் என்பவா் காரில் வந்துள்ளாா்.

அவரிடம் மேற்கொண்ட சோதனையில், ஆவணமின்றி ரூ.63,200 வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், காங்கயம் வட்டாட்சியா் தங்கவேலுவிடம் ஒப்படைத்தனா்.