தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் மனீஷ்.

Updated On :19 மார்ச் 2026, 8:17 pm

Syndication

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் தலைமை வகித்தாா். தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் சுதா வா்மா, சரிகா மோகன், தா்மேந்திர சிங், தினேஷ் ஸ்ரீ வத்சவா, தோ்தல் செலவின பாா்வையாளா்கள் மொசுகண்டி கங்காதா், சச்சின் குமாா் சிங், நிலாய் பங்கா், சுனில் என் ரனோட், சத்ய நாராயணன் தக்கா், தோ்தல் காவல் பாா்வையாளா் ராகுல் ஹெக்டே ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தற்போதைய வாக்காளா்கள் விவரங்கள், தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ள அலுவலா்களின் விவரம், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் மூலம் வாக்களிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியா் மனீஷ் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட காவல் கா்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.