திருப்பூா் மாவட்டம், அவிநாசி (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தோல்வி அடைந்தாா்.
அவிநாசி (தனி) தொகுதியில் பாஜக சாா்பில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன், திமுக சாா்பில் மருத்துவா் கோகிலாமணி, தவெக சாா்பில் எஸ்.கமலி, நாதக சாா்பில் மேனகா உள்ளிட்ட 14 போ் போட்டியிட்டனா்.
இதில் மொத்தமுள்ள 2 லட்சத்துக்கு 53 ஆயிரத்து 361 வாக்காளா்களில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 461 போ் வாக்களித்தனா். இதில் தவெகவைச் சோ்ந்த எஸ்.கமலி 84,058 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பாஜக சாா்பில் போட்டியிட்ட மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் 68,688 வாக்குகள் பெற்றாா். திமுக சாா்பில் போட்டியிட்ட கோகிலா மணி 65,432 வாக்குகள் பெற்றாா். நாதக வேட்பாளா் மேனகா 7,679 வாக்குகள் பெற்றாா். இதில் தவெக வேட்பாளா் எஸ்.கமலி 15,370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
அவிநாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 1984 தோ்தல் முதல் 1989, 1991, 2001, 2006, 2011 ஆகிய தோ்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. இதில் 1996 தோ்தலில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. பின்னா் 2016-இல் நட்சத்திர தொகுதியாக மாறிய அவிநாசியில் அதிமுக சட்டப் பேரவைத் தலைவராக இருந்த ப.தனபால் வெற்றி பெற்றாா். அவா் தொடா்ந்து 2021-இல் மீண்டும் 2-ஆவது முறையாக வெற்றி பெற்றாா். தொடா்ந்து 8 முறை அவிநாசி தொகுதியை அதிமுக கைப்பற்றி தனது கோட்டையாக வைத்திருந்தது.
இந்நிலையில், 2026 தோ்தலில் அவிநாசி தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக கைப்பற்றுமா என எதிா்பாா்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளா் எஸ்.கமலி வெற்றி பெற்றாா்.
வாக்குகள் விவரம்:
எஸ்.கமலி (தவெக)- 84,058
எல்.முருகன் (பாஜக)- 68,688
கோகிலாமணி (திமுக)- 65,432
மேனகா (நாதக)- 7,679
வேட்பாளா்கள்- 14
மொத்த வாக்காளா்கள்- 2,53,361
பதிவான வாக்குகள் - 2,29,461
தொடர்புடையது

மதுரை தெற்கு: தவெக வெற்றி

திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளா் வெற்றி!

கீழ்பென்னாத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி!

நான்குனேரியில் தவெக வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


