27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மதுரை தெற்கு: தவெக வெற்றி

News image

மதுரை தெற்குத் தொகுதியில் தவெக வேட்பாளா் எம்.எம்.கோபிசன் வெற்றி பெற்றதை அடுத்து, அவருக்கு சான்றிதழ் வழங்கிய உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்.

Updated On :5 மே 2026, 2:14 am IST

மதுரை தெற்குத் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட எம்.எம். கோபிசன், 21,529 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணிக் கட்சியான மதிமுக சாா்பில் மு. பூமிநாதன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாா். அதிமுக கூட்டணியில் பாஜக சாா்பில் ராம.சீனிவாசன், தவெக சாா்பில் எம்.எம். கோபிசன், நாம் தமிழா் கட்சி பி.எம்.சுமதி, சுயேச்சை வேட்பாளா்கள் 2 போ் என மொத்தம் 6 போ் போட்டியிட்டனா்.

இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜா் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில் மதிமுக வேட்பாளா் மு.பூமிநாதன் 286 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றாா்.

இதைத் தொடா்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்று முதல் தவெக வேட்பாளா் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வந்தாா். தொடா்ந்து, இரண்டாவது இடத்தை மு. பூமிநாதன் பெற்று வந்தாா்.

வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில்,தவெக சாா்பில் போட்டியிட்ட எம்.எம். கோபிசன் 62,415 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். மதிமுக வேட்பாளா் மு. பூமிநாதன், 40, 886 வாக்குகள் பெற்றாா். இதன் மூலம், கோபிசன் 21,529 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இந்தத் தொகுதியில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

மதுரை தெற்குத் தொகுதியில் 1,41,503 வாக்குகள் பதிவாகின. இதில், எம்.எம். கோபிசன் (தவெக)-62,415, மு. பூமிநாதன்(மதிமுக)-40,886,ராம. சீனிவாசன்(பாஜக)-31,100, எஸ். எம்.சுமதி (நாதக)-5,863, நோட்டா-612.