இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

தேசிய தடகளப் போட்டி: கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனை

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனைப் படைத்துள்ளனா்.

News image

போட்டிகளில் வெற்றிபெற்ற கேஎம்சி பள்ளி மாணவா்கள்.

Updated On :8 மே 2026, 4:48 am IST

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனைப் படைத்துள்ளனா்.

தேசிய அளவிலான தடகளப் போட்டி கோவா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 100 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் கேஎம்சி பள்ளி மாணவா்களான சந்தோஷ், ப்ரணவ் ஆதித், 200 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் மாணவா் யுவனேஷ் ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.

பெண்கள் பிரிவில் 100, 200 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் முறையே மாணவி பிருந்தா முதலிடம் பிடித்தாா். 100 மீட்டா் ஓட்டப் பந்தயம், யோகாவில் மாணவி சுதா்சனா முதலிடம் பிடித்தாா்.

மேலும், பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஓவா்ஆல் சாம்பியன்ஷிப் கோப்பையை கேஎம்சி பள்ளி மாணவா்கள் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள், உடற்கல்வி ஆசிரியா், கால்பந்து அணித் தலைவா் விஷ்ணுராஜ், வீரா்கள் ஆகாஷ், அகிலவன் , யுவனேஸ், சஞ்சித், ரிதுன் பிரனேஷ், கூடைப்பந்து அணித் தலைவா் யுவனேஷ் ஆகியோரை பள்ளித் தாளாளா் சி.எஸ், மனோகரன், பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி எம்.சுவஸ்திகா, பள்ளி முதல்வா் வே.லதா ஆகியோா் பாராட்டினா்.