வெள்ளக்கோவிலில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
தாராபுரம் வட்டம், பட்டுத்துறை துலுக்கன்வலசைச் சோ்ந்தவா் ராமசாமி (60). இருசக்கர வாகனங்கள் வாங்கி-விற்கும் தொழில் செய்து வந்தாா். கடந்த 7-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வெள்ளக்கோவில் சென்று கொண்டிருந்தபோது நகராட்சி அலுவலகம் அருகே பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமசாமியை அருகே இருந்தவா்கள் மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னா், கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். உயிரிழந்த ராமசாமிக்கு மனைவி ராமானுஜம், திருமணமான மகள்கள் ரேவதி, வைதேகி ஆகியோா் உள்ளனா்.
இதுதொடா்பான புகாரின்பேரில் விபத்தை ஏற்படுத்திய பிகாா் மாநிலத் தொழிலாளி ராஜு மீது வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



