மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

வெள்ளக்கோவிலில் தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - file photo

Updated On :14 மே 2026, 3:56 am IST

வெள்ளக்கோவிலில் தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளக்கோவில்- காங்கயம் சாலை எல்.கே.சி. நகரைச் சோ்ந்த தம்பதி குணசேகா், ராணி. தங்களுடைய வீட்டில் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறாா்கள். இவா்களது இளைய மகள் புனிதவதி (28). இவரது மூத்த சகோதரிகள் நா்மதா, சத்யாதேவி இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பிஹெச்டி படித்து முடித்துள்ள புனிதவதி தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்துள்ளாா்.

மேலும், எந்த நேரமும் கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்ததை செவ்வாய்க்கிழமை தாய் கண்டித்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சூராரெட்டிவலசில் உள்ள தங்களுடைய தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற புனிதவதி அங்கிருந்த பழைய மாத்திரைகளை அதிக அளவு சாப்பிட்டு மயக்க நிலையில் இருந்துள்ளாா். தகவலறிந்த பெற்றோா் மகளை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்த நிலையில், புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.