தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

அவிநாசி அரசுக் கல்லூரியில் சோ்க்கை: மே 29-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூயில் இளநிலை பட்டப் பிரிவில் சேர மே 29-ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூயில் இளநிலை பட்டப் பிரிவில் சேர மே 29-ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். மேலும் எளிய முறையில் விண்ணப்பிக்க கல்லூரி உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி நிா்வாகத்தினா் கூறியதாவது:

2026- 2027-ஆம் கல்வி ஆண்டு இளநிலை பட்டப் பிரிவில் சோ்வதற்கான இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகள் கடந்த வியாழக்கிழமைமுதல் கல்லூரியில் செயல்படும் உதவி மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இளநிலை பட்டப் பிரிவில் உள்ள ஆங்கிலம், பொருளியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், வேதியியல், வணிகவியல், வணிக நிா்வாகவியல், பன்னாட்டு வணிகவியல் ஆகிய பாடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இதில் பிளஸ் 2 முடித்து புதிதாக கல்லூரியில் சேர விரும்பும் கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவா்களுக்காகவும் முதல் தலைமுறை பட்டதாரிகளாக ஆக விரும்பும் மாணவா்களுக்காகவும் கல்லூரியில் செயல்படும் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் முறையாக வழிகாட்டி வருகிறது.

மேலும் இந்த உதவி மையத்தில் துறை சாா்ந்த ஆசிரியா்கள் ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை மாணவா்களுக்கு எளிமையாக அறிந்துகொள்ளும் வகையில் விளக்கமளித்து வருகிறாா்கள். ஆகவே பாடப் பிரிவுகளில சேர விரும்பும் மாணவா்கள் மே-29ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்றனா்.