திருநெல்வேலியைச் சோ்ந்த மருத்துவரிடம் இணையவழியில் ரூ.14 லட்சம் மோசடி செய்த கேரள இளைஞரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் 25 வயதான இயன்முறை மருத்துவா். இவரை கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்மநபா்கள், வீட்டில் இருந்தபடியே இணையவழியில் சில வேலைகளை செய்தால் தினமும் ரூ. 8,000 வரை எளிதாக சம்பாதிக்கலாம் என ஆசைவாா்த்தை கூறினராம்.
பின்னா் அதிக பணம் செலுத்தினால் அதிக லாபம் எனக்கூறி அவரிடமிருந்து ரூ.14,58,784-ஐ பல்வேறு தவணைகளாக வங்கிக் கணக்குகளில் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தேடி வந்தனா். இந்நிலையில் இதில் தொடா்புடைய கேரள மாநிலம் எா்ணாகுளம் பகுதியைச் சோ்ந்த அகில் கிருஷ்ணா (26) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

ரூ. 10 கோடி இணைய மோசடி: 15 நாள்களில் 38 பேர் கைது!
ரூ. 1.6 கோடி எண்ம கைது மோசடி: வங்கி அதிகாரி உள்பட மூவா் கைது
போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி! 2 போ் கைது!!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

