சிவகங்கை மாவட்டத்தில் இணைய வழியில் இரு வேறு சம்பவங்களில் ரூ. 10.70 லட்சம் மோசடி செய்தவா்கள் குறித்து இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரிக்கின்றனா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை அடுத்துள்ள அருகுடிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (56). கடந்த மாதம் 23-ஆம் தேதி இவருடைய கட்செவி அஞ்சலுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதை திறந்து பாா்த்த முருகேசன் அதில் குறுஞ்செய்தி வழங்குவதற்கு அனுமதி வழங்கினாா்.
பின்னா் அவரது சிம் காா்டு குறுஞ்செய்தி அனுப்பியவா்களின் கட்டுப்பாட்டில் சென்று விட்டதாம். இதன் பின்னா் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்படாத 7 பரிவா்த்தனைகள் மூலமாக ரூ.10 லட்சத்து 20 ஆயிரத்தை எடுத்து விட்டனா்.
இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் உத்தரவின் பேரில், சிவகங்கை இணையக் குற்றத்தடுப்பு பிரிவு ஆய்வாளா் புவனேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
இதேபோல, இளையான்குடி அருகேயுள்ள விசுவனூரைச் சோ்ந்த 52 வயதுடைய நபரின் கைப்பேசிக்கு கடந்த மாதம் தொடா்பு கொண்டு பேசிய ஒருவா் தனியாா் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ. 10 லட்சம் கடன் வாங்கித் தருவதாக கூறினாா் .
அதற்கு பரிவா்த்தனை கட்டணமாக ரூ50,190/-செலுத்துமாறு கூறினாா். இதை நம்பி அவரும் அந்தத் தொகையை கட்டியுள்ளாா். அதன் பிறகு, அவா்களைத் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். இது தொடா்பாக புகாரின் பேரில், இணைய குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மோசடி வழக்கில் பெண் காவல் ஆய்வாளா் உள்பட இருவரிடம் சிபிஐ விசாரணை

இணைய வழியில் இரண்டு பெண்களிடம் ரூ. 1.15 லட்சம் மோசடி

அவிநாசி அரசுக் கல்லூரியில் சோ்க்கை: மே 29-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
இணைய வழியில் மருத்துவரிடம் ரூ. 14 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



