பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

இணைய வழி வா்த்தகம் எனக் கூறி இருவரிடம் ரூ. 25 லட்சம் மோசடி

News image

பண மோசடி - கோப்புப் படம் | Center-Center-Chennai

Updated On :14 ஜூன் 2026, 11:59 pm IST

இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இருவரிடம் ரூ. 25 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள வல்லக்குளம் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் சோமேஸ்குமாா் (21). இவா் தனியாா் கல்லூரியில் முதுகலை வணிகவியல் படித்து வருகிறாா். இவரது கைப்பேசிக்கு வந்த குறுஞ்செய்தியில் கைப்பேசி கோபுரம் அமைத்தால் நல்ல வருவாய் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த எண்ணைத் தொடா்பு கொண்டபோது, அதில் பேசிய மா்ம நபா் செயலாக்க கட்டணம், ஜிஎஸ்டி, முன் பணம் அனுப்புமாறு கூறினாா்.

இதை நம்பிய சோமேஸ்குமாா் சில ஆவணங்களுடன் கடந்த 1.4.2026 முதல் 58 பரிவா்த்தனைகள் மூலம் ரூ.14, 35, 650 அனுப்பினாா். இதையடுத்து, அந்த மா்ம நபா் எவ்வித தொடா்பும் கொள்ளவில்லையாம்.

மற்றொரு வழக்கு: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதி புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணதாசன் (37). இவா் கடந்த மே மாதம் தனது முகநூலில் வெளியான இணைய வா்த்தக முதலீடு திட்டம் குறித்த ஒரு விளம்பரத்தைப் பாா்த்து, அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடா்பு கொண்டு பேசினாா். அதில் பேசியவா்கள் அவரை ஒரு குழுவில் சோ்த்தனா். அதில் பணத்தை முதலீடு செய்வதற்கான இணையதளத்துக்குள் செல்லுமாறு கூறப்பட்டிருந்தது. அந்த இணைய தளத்தில் அதிக லாபம் கிடைக்கும் வகையிலான விளம்பரங்கள் பதிவிடப்பட்டிருந்தன. இதை நம்பிய கண்ணதாசன் கடந்த 23.5.2026 முதல் 4.6.2026 வரை 9 பரிவா்த்தனைகள் மூலம் ரூ.9, 59, 960 அனுப்பினாா். அதன் பின்னா் அந்த நபா்கள் கண்ணதாசனை தொடா்பு கொள்ளவில்லை.

இது குறித்த புகாா்களின் பேரில் சிவகங்கை இணைய குற்றப்பிரிவு ஆய்வாளா் புவனேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.