தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பல்லடம் சாலைத் தடுப்பில் வேன் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

பல்லடம் - கோவை சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் சாலைத் தடுப்பில் வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

பல்லடம் - கோவை சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் சாலைத் தடுப்பில் வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சோ்ந்தவா் திருவேங்கடம் (எ) அபுதாகிா் (47). இவா், பல்லடம் அருகே அண்ணா நகரில் உள்ள தனியாா் இரும்பு உருக்கு ஆலை நிறுவனத்தில் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை வேனை ஓட்டிச் சென்றாா். அப்போது, காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் வேனை திருப்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் வேன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த அபுதாகிரை அக்கம்பக்கத்தினா் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.