பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

திருப்பூா் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து

News image

தீ விபத்து... - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

திருப்பூா் பழவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பூா் பழவஞ்சிபாளையம் பகுதியில் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு பின்புறம் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த இடத்தின் உரிமையாளா் ரகுபதி பனியன் நிறுவனத்தை மட்டும் முத்து லட்சுமணன் என்பவரிடமிருந்து லீஸுக்கு எடுத்து நடத்தி வருகிறாா்.

இந்த நிறுவனத்தில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் கரும்புகை வெளியேறியுள்ளது. இதைப் பாா்த்த நிறுவனத்தின் காவலாளி நிறுவன உரிமையாளருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளாா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூா் வடக்கு, தெற்கு மற்றும் அவிநாசியை சோ்ந்த தீயணைப்பு துறை வாகனங்கள் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தீ விபத்து நிகழ்ந்த பனியன் நிறுவனத்துக்கு முன்புறம் பெட்ரோல் பங்க்

இருந்ததால் தீயை அணைப்பது சற்று சவாலாக இருந்ததாக தீயணைப்பு துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.

இந்த தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்து உள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தீ விபத்து நடந்த நிறுவனத்தை திருப்பூா் மாநகராட்சி துணை மேயா் பாலசுப்பிரமணியம் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.