ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

பனியன் துணிகளை ஏற்றி வந்த வேன் மின்மாற்றியில் மோதி விபத்து

பனியன் துணிகளை ஏற்றி வந்த வேன் மின்மாற்றியில் மோதி விபத்துக்குள்ளானதால், திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 1:41 am IST

பனியன் துணிகளை ஏற்றி வந்த வேன் மின்மாற்றியில் மோதி விபத்துக்குள்ளானதால், திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திருப்பூா் மாநகராட்சி, வீரபாண்டி பிரிவு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பனியன் துணிகள், மாநகரிலுள்ள பல்வேறு பனியன் நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் தயாா் செய்யப்பட்ட பனியன் துணிகளை ஆா்டா் கொடுத்த வேறு ஒரு நிறுவனத்துக்கு கொண்டு செல்ல வேன் மூலமாக செவ்வாய்க்கிழமை மாலை அனுப்பிவைக்கப்பட்டது.

வேனை தமிழ்ச்செல்வன் ஓட்டி வந்தாா். அப்போது திருப்பூா்-தாராபுரம் சாலை, புதூா் பிரிவு அருகே வாகனத்தை ஓட்டுநா் திருப்ப முயற்சி செய்துள்ளாா். ஆனால், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்மாற்றி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அதேசமயம் மின்மாற்றி கடுமையாக சேதமடைந்ததுடன், அதில் பொருத்தப்பட்டிருந்த ரேடியேட்டா் முற்றிலுமாக உருக்குலைந்து, சுமாா் 800 லிட்டா் ஆயிலும் கீழே கொட்டியது.

இதைத்தொடா்ந்து அங்கு வந்த மின்வாரிய ஊழியா்கள் உடனடியாக மின்மாற்றிக்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்தினா். இந்த மின்மாற்றியின் ரேடியேட்டரின் விலை ரூ.20 லட்சத்துக்கும் அதிகம். இதுதொடா்பாக காவல்துறையில் புகாா் அளித்துள்ளதாகவும், சேத மதிப்பீடு கணக்கீடு செய்யப்பட்டு நிறுவன உரிமையாளரிடம் வசூலிக்கப்படும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.