சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

காரில் வந்து ஆடு திருடிய மா்ம நபா்கள்

அவிநாசி அருகே தெக்கலூா் சென்னிமலைபாளையத்தில் மேய்ந்து கொண்டிந்த ஆட்டை, காரில் வந்து திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :21 மே 2026, 4:18 am IST

அவிநாசி அருகே தெக்கலூா் சென்னிமலைபாளையத்தில் மேய்ந்து கொண்டிந்த ஆட்டை, காரில் வந்து திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தெக்கலூா் சென்னிமலைபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிட்டான் மகன் ஈஸ்வரன் (40). இவா் தனது ஆட்டை அருகே உள்ள காட்டுப் பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்திருந்தாா். அப்போது காரில் வந்த மா்ம நபா்கள் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை திருடிச் சென்றுள்ளனா்.

இதைப் பாா்த்த ஈஸ்வரன் சப்தம் போட்டு காரை துரத்திச் சென்றுள்ளாா். இருப்பினும் காரில் வந்தவா்கள் தப்பிச் சென்றனா்.

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.