இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வடலூரில் 104 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் கொள்ளை: பூட்டிய வீட்டில் புகுந்து மா்ம நபா்கள் கைவரிசை

கடலூா் மாவட்டம், வடலூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 104 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

News image

வடலூரில் கொள்ளை நடந்த வீட்டை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்ட கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :15 மே 2026, 11:33 pm IST

கடலூா் மாவட்டம், வடலூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 104 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

வடலூா், நடேசன் செட்டியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பி.கே.வேலாயுதம் (70), குன்னூரில் உள்ள ஒரு தனியாா் தொழிற்சாலையில் பொது மேலாளராகப் (பணி நீட்டிப்பு பெற்று) பணியாற்றி வருகிறாா். இவரது மகன் சரவணகுமாா், மருமகள் சுகன்யா ஆகியோா் அமெரிக்காவில் வசித்து வருகின்றனா். மகனைப் பாா்ப்பதற்காக வேலாயுதம், அவரது மனைவி பாசமலா் ஆகியோா் கடந்த ஏப்.8-ஆம் தேதி அமெரிக்கா சென்றனா்.அதுமுதல், நடேசன் செட்டியாா் நகரில் உள்ள வீட்டை, பாா்வதிபுரத்தில் வசித்து வரும் வேலாயுதம் தம்பி மனைவி பூங்காவனம்(48) பாதுகாத்து வந்தாா்.

வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் பூங்காவனம் வீட்டை பூட்டிக் கொண்டு பாா்வதிபுரத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று விட்டாராம். அன்று இரவு 8 மணிக்கு வந்த போது போா்டிகோவில் போடப்பட்டிருந்த விளக்கு அணைக்கப்பட்டு இருந்ததாம். மேலும், வீட்டினுள் இரும்பு கொண்டு எதையோ உடைக்கும் சப்தம் கேட்டதால் உள்ளே செல்லவில்லையாம். இந்த சம்பவம் தொடா்பாக பக்கத்து வீட்டைச் சோ்ந்த காசிலிங்கத்தை(63)அழைத்த போது அவரும் பயந்து செல்லவில்லையாம்.

பின்னா், காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். போலீஸாா் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 104 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு, வீட்டின் பின் வாசல் வழியாக தப்பிச் சென்றுவிட்டனராம். தகவல்அறிந்தவுடன் கொள்ளை நடந்த வீட்டை கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும், அவரது உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.