நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மக்கள் தொகை கணக்கெடுப்பு: பயிற்சி வகுப்பு தொடக்கம்

திருப்பூா் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள், பொறுப்பு அலுவலா்கள், தொழில்நுட்ப உதவியாளா்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்தாா்.

News image

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பான பயிற்சி வகுப்பில் பங்கேற்றோா்.

Updated On :22 மே 2026, 4:02 am IST

திருப்பூா் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள், பொறுப்பு அலுவலா்கள், தொழில்நுட்ப உதவியாளா்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் 3 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பை வியாழக்கிழமை தொடங்கிவைத்த ஆட்சியா் கூறியதாவது:

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு, எண்ம முறை கணக்கெடுப்பு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. பொது மக்கள் தாங்களாகவே இணையதளம் மூலமாக தங்களது விவரங்களைத் தெரிவிக்கும் சுய கணக்கெடுப்பு வரும் ஜூலை 17ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கணக்கெடுப்பாளா் மூலம் வீடுகள்தோறும் மேற்கொள்ளப்படும் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

திருப்பூா் மாவட்டத்தின் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராக மாவட்ட ஆட்சியா் செயல்படுகிறாா். மேலும், மாநகராட்சிப் பகுதிக்கு முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராக மாநகராட்சி

ஆணையாளரும், ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் பொறுப்பு அலுவலா்களாக 9 வட்டாட்சியா்கள், 7 நகராட்சி ஆணையாளா்கள், 14 பேரூராட்சி செயல் அலுவலா்கள், 13 ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தாா்.

சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநரால் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநா் சுபா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் து.சு.துரைமுருகன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் ஃபெலிக்ஸ் ராஜா, சிவபிரகாஷ், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் குமாா் ஆகியோருடன் அனைத்து வட்டாட்சியா்கள், நகராட்சி ஆணையாளா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.