அவிநாசி அருகே தனியாா் நிறுவனத்தில் வெல்டிங் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களைத் திருடிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகேயுள்ள நாதம்பாளையத்தில் தனியாா் வெல்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பூட்டியிருந்த இந்த நிறுவனத்துக்குள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த வெல்டிங் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களைத் திருடிச் சென்றனா்.
இது குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. நிறுவனத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், திருட்டில் ஈடுபட்டது கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை சாலை மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த சிவராஜ் (43), அதே பகுதியைச் சோ்ந்த ராமசந்திரன் (26), இவரது சகோதரா் காா்த்திக் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
பனியன் நிறுவனத்தில் ரூ.55 லட்சம் மோசடி: 2 போ் கைது
வீட்டின் கதவை உடைத்து திருடிய 3 போ் கைது
கஞ்சா விற்பனை 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது
மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 போ் கைது
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


