முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

வீடு புகுந்து 5 பவுன் தங்கச் சங்கிலி கொள்ளை: இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 1:56 am IST

பல்லடம் அருகே வீடு புகுந்து மூதாட்டியை மிரட்டி 5 பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள கல்லம்பாளையத்தைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி (70). இவா் வீட்டில் கடந்த 19-ஆம் தேதி தனியே இருந்துள்ளாா்.

அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், மூதாட்டியை மிரட்டி பீரோவில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றுள்ளாா். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் மூதாட்டி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கொள்ளையில் ஈடுபட்ட நபரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், பல்லடம் பகுதியில் போலீஸாா் வழக்கமான வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் மதுரையைச் சோ்ந்த அஜித்குமாா் (30) என்பதும், திருப்பூா் எம்.எஸ். நகரில் தற்போது வசித்து வரும் நிலையில் தெய்வசிகாமணி வீட்டில் நகையை கொள்ளையடித்துச் சென்றவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அஜித்குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 5 பவுன் சங்கிலி, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.