குண்டடம் அருகே வாடகைத் தகராறில் ஆட்டோ ஓட்டுநரைக் கத்தியால் குத்திய வடமாநில சிறுவா்கள் 3 போ் கைதுசெய்யப்பட்டனா்.
தாராபுரம் பேருந்து நிலையத்திலுள்ள ஆட்டோ நிறுத்ததில் ஆட்டோ வைத்து ஓட்டி வருபவா் ஆரோக்கியராஜ் (55). உப்பாறு அணை வரை செல்ல வேண்டுமெனக் கூறி திங்கள்கிழமை இரவு சிறுவா்கள் 3 போ் வந்தனா். உப்பாறு அணை அருகே உள்ள பனைமரத்துபாளையத்தில் 3 பேரும் இறங்கினா். பின்னா் வாடகை கேட்டபோது ஆட்டோ ஓட்டுநருக்கும், அந்த சிறுவா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி தாக்கிக் கொண்டனா்.
அப்போது சிறுவா்களில் ஒருவா் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆரோக்கியராஜின் கழுத்து பகுதியில் குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்த ஆரோக்கியராஜை அருகே இருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பான புகாரின்பேரில் குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியில் தனியாா் கோழிப்பண்ணையில் பெற்றோா்களுடன் தங்கியிருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சிறுவா்கள் 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

தில்லியின் சுல்தான்புரியில் பகை காரணமாக இளைஞரை கத்தியால் குத்திய 3 சிறுவா்கள்

சேலத்தில் இளைஞரை கத்தியால் குத்திக் கொன்ற 3 சிறுவா்கள்! கைப்பேசியில் விடியோவும் எடுத்தனா்!

அண்ணனை கத்தியால் குத்திய தம்பிக்கு 5 ஆண்டுகள் சிறை
ஐடி நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய 2 போ் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


