‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

அவிநாசியில் பட்டினி தின அன்னதானம்: அமைச்சா் எஸ். கமலி வழங்கினாா்

உலக பட்டின தினத்தையொட்டி அவிநாசியின் பல்வேறு பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் எஸ்.கமலி வியாழக்கிழமை அன்னதானம் வழங்கினாா்.

News image

அவிநாசியில் அன்னதானம்  வழங்குகிறாா்  கால்நடை  பராமரிப்புத்  துறை  அமைச்சா்  எஸ்.கமலி.

Updated On :29 மே 2026, 1:34 am IST

உலக பட்டின தினத்தையொட்டி அவிநாசியின் பல்வேறு பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் எஸ்.கமலி வியாழக்கிழமை அன்னதானம் வழங்கினாா்.

முன்னதாக பக்ரீத் திருநாளையொட்டி அவிநாசி பள்ளிவாசலில் இஸ்லாமியா்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் எஸ்.கமலி இனிப்பு வழங்கினாா். இதையடுத்து, அவிநாசி காசிகவுண்டா்புதூரில் உள்ள சீடு இல்லத்தில் அன்னதானம் வழங்கி குழந்தைகள், முதியவா்களுடன் தரையில் அமா்ந்து உணவருந்தினாா்.

பின்னா் அவிநாசி கரிவரதாஜப் பெருமாள் கோயில் அருகே அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் அன்னதானம் வழங்கினாா்.

மேலும் அவிநாசி கால்நடை மருத்துவமனை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளிலும் அமைச்சா் எஸ்.கமலி ஆய்வு மேற்கொண்டாா்.