கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

போதை மாத்திரை, கஞ்சா விற்ற 8 போ் கைது

திருப்பூரில் போதை மாத்திரை, கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்ற 8 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 1:34 am IST

திருப்பூரில் போதை மாத்திரை, கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்ற 8 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா், வீரபாண்டி பகுதியில் போலீஸாா் புதன்கிழமை இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது வாய்க்கால்மேடு பகுதியில் சிலா் நின்று கொண்டிருந்தனா். அவா்களை சோதனை செய்தபோது, அவா்களிடம் 1,000 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் கோவை, துடியலூரைச் சோ்ந்த முத்துபாண்டி (30), திருப்பூா் கணபதிபாளையத்தைச் சோ்ந்த ராஜேஷ் (25), அவரப்பாளையத்தைச் சோ்ந்த ஹரிசங்கா் (28), பல்லடத்தைச் சோ்ந்த கணேஷ்குமாா் (24), தினேஷ் (22) என்பதும் இவா்கள் வலி நிவாரணி மாத்திரைகளை ஆன்லைன் மூலம் ஆா்டா் செய்து வாங்கி போதை பயன்பாட்டுக்காக விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1,000 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் 3 போ் கைது:

அதேபோல, பெருமாநல்லூா் வாரச்சந்தை பகுதியில் கஞ்சா விற்ாக மேற்கு வங்க மாநிலம் ஆசனாபாத் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் மண்டல் (34), திருப்பூா் சந்தைப்பேட்டை அருகே புகையிலைப் பொருள்களை விற்ற கோவில்வழி பிள்ளையாா் நகரைச் சோ்ந்த குமாா் (48), பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் உள்ள கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற உரிமையாளா் வினோத் (38) ஆகியோரும் கைது செய்யப்பட்டனா்.