2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

அவிநாசி, குன்னத்தூா் சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை! ஜிபே மூலம் ரூ.6.88 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்!

Police

லஞ்சம் - கோப்புப்படம்

Updated On :

அவிநாசி, குன்னத்தூா் சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் திங்கள்கிழமை மாலை மேற்கொண்ட திடீா் சோதனையில், அதிகாரிகள் ஜிபே மூலம் ரூ.6.88 லட்சம் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் இரண்டு குழுக்களாகப் பிரிந்து குன்னத்தூா், அவிநாசி சாா் பதிவாளா் அலுவலகங்களில் திங்கள்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, குன்னத்தூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததுடன், சாா் பதிவாளா் ராமதிலகம், இளநிலை உதவியாளா் கஸ்தூரி, கணினி ஆபரேட்டா்கள் ரவி, மகேஸ்வரி ஆகியோரின் ஜிபே கணக்குகளை ஆய்வு செய்தபோது, மொத்தம் ரூ.6 லட்சத்து 88 ஆயிரத்து 205 லஞ்சமாகப் பெற்றது தெரியவந்தது.

மேலும், அலுவலகத்துக்குள் இருந்த இடைத்தரா்களிடம் இருந்து ரூ.11,100 பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல, அவிநாசி சாா் பதிவாளா் அலுவலகத்திலும் ஆவணங்கள், பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன், பத்திரப் பதிவுக்காக வந்திருந்த பொதுமக்களிடமும், அலுவலா்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.