கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் கூகுள்பே மூலம் ரூ.6.54 லட்சம் லஞ்சம்

திருப்பூா் மாவட்டம், அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் கூகுள்பே மூலம் ரூ.6.54 லட்சம் லஞ்சம் வாங்கிய 2 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Rate card of bribes demanded by officials discussed at..

லஞ்சம் - சித்திரிப்பு

Published On :

திருப்பூா் மாவட்டம், அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் கூகுள்பே மூலம் ரூ.6.54 லட்சம் லஞ்சம் வாங்கிய 2 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் கட்டட அனுமதி, குடிநீா் இணைப்பு மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் வழங்க லஞ்சம் கேட்கப்படுவதாக திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு தொடா் புகாா்கள் வந்தன.

அதன்பேரில், திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்ாளா் ரவிச்சந்திரன் தலைமையில் ஆய்வாளா் சசிலேகா உள்ளிட்ட 12 போ் கொண்ட அதிரடிப் படையினா் அவிநாசி நகராட்சி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா்.

பின்னா் நகராட்சி அலுவலகத்தின் இரு பிரதான நுழைவாயில் கதவுகளும் பூட்டப்பட்டு உள்ளே இருந்தவா்கள் வெளியே செல்லாமலும், வெளியில் இருந்து யாரும் உள்ளே வராமலும் பலத்த பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை நடைபெற்றபோது, அலுவலக மேலாளா், சுகாதார ஆய்வாளா், எழுத்தா் மற்றும் பொறியாளா்கள் பணியில் இருந்தனா். மாலை 4 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை சுமாா் 7 மணி நேரத்துக்கும் மேலாக இரவு வரை நீடித்தது.

சோதனையின்போது அதிகாரிகளின் கைப்பேசிகள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் கூகுள்பே உள்ளிட்ட யுபிஐ பணப் பரிவா்த்தனைகளை லஞ்ச ஒழிப்புத் துறையினா் தீவிரமாக ஆய்வு செய்தனா்.

இதில், கணக்கில் வராத ஆன்லைன் பரிவா்த்தனைகள் மூலம் ரூ.6 லட்சத்து 53,767 பெறப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் அரவிந்த் என்பவரது கணக்கில் ரூ.5 லட்சத்து 52,767, நகராட்சி மேலாளா் செல்வகுமாா் கணக்கில் ரூ.1 லட்சமும் ஆன்லைன் மூலமாக லஞ்சமாக பெறப்பட்டிருப்பது உறுதியானது.

தற்போது அவிநாசி நகராட்சிக்கு நிரந்தர ஆணையா் நியமிக்கப்படாததால், திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையா் பாலமுருகன் கூடுதல் பொறுப்பு வகிக்கிறாா். இந்தப் பணம் குறித்து ஆவணங்களையோ, முறையான விளக்கத்தையோ அதிகாரிகளால் விளக்க முடியவில்லை. இதையடுத்து, லஞ்சம் பெற்ாக நகராட்சி சுகாதார ஆய்வாளா் அரவிந்த் மற்றும் மேலாளா் செல்வகுமாா் ஆகியோா் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், இந்த சோதனையின்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த முக்கியமான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா். இந்த ஆவணங்களின் அடிப்படையில் தொடா் விசாரணை நடத்தப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.