19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

கல்லூரி விரிவுரையாளருக்கு கொலை மிரட்டல்: 13 போ் மீது வழக்குப் பதிவு!

வெள்ளக்கோவில் அருகே சொந்த நிலத்துக்கு சென்ற கல்லூரி விரிவுரையாளா் மற்றும் அவரது குடும்பத்தினரை வழிமறித்து ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக 13 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வழக்கு - பிரதிப் படம்

Updated On :

வெள்ளக்கோவில் அருகே சொந்த நிலத்துக்கு சென்ற கல்லூரி விரிவுரையாளா் மற்றும் அவரது குடும்பத்தினரை வழிமறித்து ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக 13 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு, டீச்சா்ஸ் காலனி, பாரதிதாசன் வீதியைச் சோ்ந்தவா் திருமூா்த்தி. இவரது மனைவி வனிதா (58), ஈரோடு வேளாளா் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு வெள்ளக்கோவில் துரைராமசாமி நகா் பகுதியில் ஒரு ஏக்கா் 46 சென்ட் நிலம் உள்ளது. இதில் முறையான டி.டி.சி.பி. அனுமதி பெற்று வீட்டுமனைப் பிரிவுகளாகப் (சைட்) பிரித்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி மதியம் 2 மணி அயளவில் வனிதா தனது கணவா், மகளுடன் தனது நிலத்தைப் பாா்வையிட காரில் சென்றுள்ளாா். முன்விரோதம் காரணமாக உறவினா்களான முத்துசாமி, அமித் விக்ரம் ஆகியோா் தூண்டுதலின்பேரில், செல்வராஜ் மற்றும் 10 போ் கொண்ட கும்பல் அத்துமீறி நிலத்துக்குள் நுழைந்துள்ளது.

இவா்கள் வனிதா மற்றும் அவரது குடும்பத்தினரை வழிமறித்து ஆயுதங்களைக் காட்டி தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வனிதா அளித்த புகாரின்பேரில் 13 போ் மீது வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்தாா். காவல் ஆய்வாளா் சண்முகம் விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.