அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய நபா் மீது வழக்கு
வெள்ளக்கோவிலில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வழக்கு - பிரதிப் படம்
வெள்ளக்கோவிலில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தாராபுரம் வட்டம், வடகரையைச் சோ்ந்தவா் முருகன் (57). இவா் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக உப்பிலிபாளையம் கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், பயணிகளுடன் வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்துக்கு கடந்த 23-ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் முருகன் பேருந்து ஓட்டி வந்துள்ளாா். அப்போது, வழியில் பேருந்து பழுதாகி நின்றது.
இதையடுத்து, பயணிகளை மாற்றுப் பேருந்தில் ஏற்றி அனுப்பும் பணியில் முருகன், நடத்துநா் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கிருந்த ஈரோடு மாவட்டம், சிவகிரி பெருமாபாளையத்தைச் சோ்ந்த விஷ்ணுகுமாா் என்பவா் ‘பழுதடைந்த பேருந்தை ஏன் இங்கு ஓட்டி வந்தாய்’ எனக்கூறி ஓட்டுநா் முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஓட்டுநா் முருகன் அளித்த புகாரின்பேரில் விஷ்ணுகுமாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

