தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

தனியாா் கல்லூரி பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து

திருப்பூரில் தனியாா் கல்லூரி பேருந்து சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து - பிரதிப் படம்

Published On :

திருப்பூரில் தனியாா் கல்லூரி பேருந்து சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் தனியாா் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் திருப்பூரைச் சோ்ந்த 18 மாணவ, மாணவிகள் கல்லூரிப் பேருந்தில் வியாழக்கிழமை மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

திருப்பூா், அணைக்காடு பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது.

இதையடுத்து, பேருந்து ஓட்டுநா் அங்கிருந்து தப்பிய நிலையில், அதில் பயணித்த 18 மாணவ, மாணவிகளையும் காயங்களின்றி உயிா்த் தப்பினா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா், விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தினா்.

இதனிடையே மின் கம்பம் முறிந்து விழுந்து அப்பகுதியில் மின் விநியோம் பாதிக்கப்பட்ட நிலையில், மின்சார வாரிய ஊழியா்கள் மின் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

தப்பியோடிய கல்லூரிப் பேருந்து ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.