இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

சேவூா் அருகே பெண் கொலை

கொலை... - கோப்புப் படம்

Published On :

சேவூா் அருகே குட்டகத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூா் வட்டம், கொட்டக்காட்டுப்பாளையம், லாகம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி மகள் ஜானகி(39). இவரது கணவா் நடராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, ஜானகி, அவரது மகள் ஆகியோா் தந்தை பழனிசாமியுடன் வசித்து வந்தனா். மேலும், ஜானகி ஆடுகளை மேய்த்து வந்துள்ளாா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை ஆடுகளை மேய்க்கச் சென்ற ஜானகி திரும்பி வரவில்லை என அவரது தந்தை பழனிசாமி தேடியுள்ளாா். ஆடுகள் மட்டும் அருகே உள்ள தனியாா் காட்டுப் பகுதிக்குள் புகுந்து மேய்ந்து கொண்டிருந்துள்ளது.

இதற்கிடையே அவிநாசி அருகே சேவூா் பகுதிக்குள்பட்ட குட்டகம் தேவம்பாளையம் அருகே ஜானகி காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதைப் பாா்த்து தந்தை பழனிசாமி அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சேவூா் போலீஸாா் சென்று ஜானகியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, ஜானகி பாலியல் துன்புறுத்தலால் கொலை செய்யப்பட்டரா அல்லது தங்க நகைக்காக கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.