2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

அவிநாசி, திருமுருகன்பூண்டியில் தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் செய்யக் கோரி அவிநாசி, திருமுருகன்பூண்டி நகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமுருகன்பூண்டியில்  காத்திருப்புப்  போராட்டத்தில்  ஈடுபட்ட  தூய்மை ப் பணியாளா்கள்.

Published On :

ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் செய்யக் கோரி அவிநாசி, திருமுருகன்பூண்டி நகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிஐடியூ ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அனைத்துப் பிரிவு ஒப்பந்தம் மற்றும் சுயஉதவிக் குழுப் பணியாளா்களை நிபந்தனையின்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளா்களை தனியாா்மயமாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அரசாணை எண்கள் 10, 139 மற்றும் 152 ஆகியவற்றை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள், டெங்கு தடுப்பு ஊழியா்கள், கணினி இயக்குபவா்கள் மற்றும் குடிநீா் விநியோகப் பணியாளா்கள் என அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.

சுயஉதவிக் குழுப் பணியாளா்களுக்கும் இஎஸ்ஐ, பிஎஃப் பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியின்போது உயிரிழந்த தொழிலாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை தாமதமின்றி வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலை உணவுக்கு பதிலாக, உணவுப்படியாக ரூ.100 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியூ ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பி. பழனிசாமி தலைமை வகித்தாா். திருமுருகன்பூண்டி பழைய நகராட்சி அலுவலக கட்டடம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு கிளைத் தலைவரும் நகா்மன்ற உறுப்பினருமான சுப்பிரமணி தலைமை வகித்தாா்.

இதில் மாவட்டச் செயலாளா் ரங்கராஜ், துணைத் தலைவா் உன்னிகிருஷ்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். பொதுத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் பழனிசாமி, மாதா் சங்க ஒன்றிய துணைத் தலைவா் தேவி, முன்னாள் நிா்வாகி காமராஜ், கிளைச் செயலாளா் லோகநாதன், மாவட்ட குழு உறுப்பினா்கள் வையாபுரி, பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.