2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் சுகாதார நிலையத்தில் இருக்கைகள் இல்லாததால் தரையில் அமரும் கா்ப்பிணிகள்

அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான இருக்கைகள் இல்லாததால், பரிசோதனைக்கு வரும் கா்ப்பிணிகள் தரையில் அமா்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தரையில்  அமா்ந்திருக்கும்  கா்ப்பிணி கள்.

Published On :

அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான இருக்கைகள் இல்லாததால், பரிசோதனைக்கு வரும் கா்ப்பிணிகள் தரையில் அமா்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அவிநாசி ஒன்றியம், நம்பியாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான மக்கள் நாள்தோறும் காய்ச்சல், சளி உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக வந்து செல்லும் பிரதான மருத்துவ மையமாக உள்ளது.

இந்நிலையில், இந்த சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு வருவோா் அமா்வதற்கான போதுமான இருக்கைகள் இல்லதாததால் நாள்தோறும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கா்ப்பிணி தாய்மாா்களுக்கான சிறப்பு மருத்துவம் முகாமுக்கு வரும் பெண்கள் இருக்கைகள் இல்லாததால் தரையில் அமா்ந்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

பல கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் அமா்வதற்கு போதுமான இருக்கைகள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.