முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பென்னாகரம் அருகே அவலம்: சாலை வசதி இல்லாததால் சிகிச்சைக்காக டோலியில் தூக்கிச் செல்லப்பட்ட பெண்

அலங்கட்டு மலைக் கிராமத்திற்குச் சாலை வசதி இல்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணைத் டோலியில் தூக்கிச் சென்ற அவலநிலை குறித்து...

Plight near Pennagaram: Woman carried in a makeshift stretcher for medical treatment due to lack of road connectivity

அலங்கட்டு மலைக் கிராமத்தில் உடல்நலம் பாதிப்புக்கு உள்ளான பெண்ணை டோலி கட்டி எடுத்துச் செல்லும் கிராம மக்கள்.

Published On :

பென்னாகரம் அருகே அலங்கட்டு மலைக் கிராமத்திற்குச் சாலை வசதி இல்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணைத் டோலியில் தூக்கிச் சென்ற அவலநிலை ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது அலங்கட்டு மலைக் கிராமம். இந்தப் பகுதியில் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பூர்வகுடிகளான இவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.

கடல் மட்டத்திலிருந்து 2,000 அடிக்கும் மேல் அடர்ந்த வனப் பகுதியில் இந்த அலங்கட்டு மலைக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராம மக்கள் பாலக்கோடு அருகே உள்ள சீங்காடு வழியாகச் சாலை மார்க்கமாகவும், அதன்பிறகு அடர்ந்த வனப்பகுதிக்குள் கரடுமுரடான பாதையிலும் பயணித்து வருகின்றனர். நாள்தோறும் இச்சாலையின் வழியாக மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காகப் பாலக்கோடு மற்றும் தருமபுரி பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் ஆபத்தான வனப்பகுதியைக் கடந்து செல்கின்றனர்.

அலங்கட்டு மலைக் கிராமத்திற்குச் சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் எனக் கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பேரில், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில், பாலக்கோடு வனத்துறையின் முன் அனுமதியோடு 7 கிலோமீட்டர் தொலைவிற்கு மண் சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

அப்போது, அலங்கட்டு பகுதியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவு வரை மட்டுமே சாலை அமைக்க அனுமதி உள்ளதாகவும், மீதமுள்ள இடங்கள் வனத்துறைக்குச் சொந்தமானது என்றும் கூறி, மண் சாலை அமைக்கும் பணியைப் பாதியிலேயே வனத்துறையினர் நிறுத்தினர். இருப்பினும், கிராம மக்கள் அந்தக் கரடுமுரடான வனப்பகுதிச் சாலையையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். சில நேரங்களில் மழை காரணமாகப் பல இடங்களில் ஏற்படும் மண்ணரிப்பையும் தாங்களாகவே சரி செய்து வந்தனர்.

இந்நிலையில், பென்னாகரம் பகுதியில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருவதால், அலங்கட்டு மலைக் கிராமப் பகுதியில் இருந்து கன்னியம்மன் கோயில் வழியாக அடிவாரப் பகுதிக்குச் செல்லும் 7 கிலோமீட்டர் தொலைவிலான மண் சாலையில் பல இடங்களில் கடுமையான மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் கூடச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

அலங்கட்டு மலைக் கிராமத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும்போது பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப் பூச்சிகள் கடிப்பதாே அல்லது காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படும்போதோ, அவசர மருத்துவ வசதி பெற மூங்கில்களால் டோலி (தொட்டில்) அமைத்து, பாதிக்கப்பட்ட நபர்களைச் சுமந்தபடி அடர்ந்த வனப்பகுதியைக் கடந்து அடிவாரப் பகுதியான சீங்காடு வரை செல்கின்றனர். அங்கிருந்து வாடகை வாகனம் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவல நிலை தொடர்ந்து நீடிக்கிறது.

சாலையில் ஏற்பட்டுள்ள மண்ணரிப்பு மற்றும் தாமதம் காரணமாக, உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் சில நேரங்களில் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், மஞ்சு மலைப் பகுதியில் இருந்து உறவினர் வீட்டிற்கு வந்த நாகராஜ் மனைவி மல்லிகா (28) என்பவருக்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாததால், அவரை மூங்கில் டோலி மூலம் சுமந்து வந்து பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இனிமேலும் இதுபோன்ற அவலங்கள் தொடராமல் இருக்கவும், உயிர்ப்பலிகளைத் தடுக்கவும் அலங்கட்டு மலைக் கிராமத்திற்கு உடனடியாகத் தார்ச் சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Summary

Plight Near Pennagaram: Lack of Roads Forces Villagers to Transport Ailing Woman on a Stretche

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER