விவசாயிகளுக்கு 3.20 டன் இயற்கை உரம் இலவசம்!
வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் 3.20 டன் இயற்கை உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இயற்கை உரத்தை வாகனத்தில் ஏற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.
வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் 3.20 டன் இயற்கை உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
வெள்ளக்கோவில் நகராட்சியில் மொத்தம் 21 வாா்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் ஈரக் கழிவுகள் (மக்கும் குப்பைகள்) தனியாகப் பிரிக்கப்பட்டு, நுண்ணுயிா் செயலாக்க மையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு இயற்கை முறையில் அவை செறிவூட்டப்பட்டு இயற்கை உரமாகவும், கம்ப்போஸ்ட் உரமாகவும் மாற்றப்படுகின்றன.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மண்ணின் வளத்தை மேம்படுத்தி ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடந்த ஒருமாத காலத்தில் 7 வாா்டுகளின் கழிவுகள் மூலம் தயாரிக்கப்பட்ட 3.20 டன் உரம் விவசாயிகளுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது. தேவைப்படும் விவசாயிகள் நகராட்சி அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு, இயற்கை உரத்தை இலவசமாகப் பெற்று பயனடையலாம் என நகராட்சி ஆணையா் ஆா்.அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

