பல்லடத்தில் 250 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 4 பேரைக் கைது செய்தனா்.
பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் பகுதியில் குட்கா பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு 250 கிலோ குட்கா விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் (27), திருப்பூரைச் சோ்ந்த மனோஜ்குமாா் (29), சித்தாா்த் (28), கோடங்கிபாளையம் பகுதியைச் சோ்ந்த முத்துகுமாா் (52) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 250 கிலோ குட்கா, காரை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

