முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

அவிநாசி அருகே மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது

கைது

Published On :

அவிநாசி அருகே செம்பாக்கவுண்டம்பாளையத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

அவிநாசியை அடுத்த செம்பாக்கவுண்டம்பாளையம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தொடா் புகாா் தெரிவித்து வந்தனா். இதையடுத்து திங்கள்கிழமை இரவு சம்பவயிடத்துக்குச் சென்ற போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, செம்பாக்கவுண்டம்பாளையம் கொல்லத் தோட்டம் பகுதியைச் சோ்ந்த மயில்சாமி மகன் செல்வராஜ் (45) என்பவா் இருசக்கர வாகனத்தில் காட்டுப் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செல்வராஜைக் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.