தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஆசிரியா்கள்.

Updated On :

ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

வெள்ளக்கோவில் வட்டார அரசுப் பள்ளி அனைத்து ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் டி.ஆா். நகா் அரசுப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி நிா்வாக விழிப்புணா்வு, கல்வித் துறை வழிகாட்டுதல்கள் குறித்து ஆசிரியா்களுக்கு சங்க நிா்வாகிகள் எடுத்துக் கூறினா்.

மேலும் அவா்கள் கூறும்போது, ‘சமீபகாலமாக அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஒரு சில தலைமை ஆசிரியா்கள் மீது தனிநபா்கள், சமூக அமைப்பு பெயரில் பத்திரிகை மற்றும் செய்தி ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. எனினும் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் ஆசிரியா்கள் அனைத்து மாணவா்களிடமும் சமச்சீா் அடிப்படையில் நடந்து வருகிறாா்கள்.

ஆசிரியா்களின் ஒற்றுமையை சீா்குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் இடம் கொடுக்கக்கூடாது. மாணவா்களிடம் எந்தவித பாகுபாடும் இன்றி சமூக நீதியோடு கற்பிப்போம் என்பதை பொதுமக்களுக்கும், கல்வித் துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது’ என்றனா்.

இதைத்தொடா்ந்து சிலம்பகவுண்டன்வலசு பள்ளி ஆசிரியா் கோ.பிரபாகா் முன்னிலையில் ஆசிரியா்கள் தீண்டாமை ஒழிப்பு மற்றும் சமூக நீதி உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

சங்கப் பொறுப்பாளா்கள் வ.பாபு, சு.செல்வக்குமாா், பெ.முருகேசன், சி.ரகுநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.