வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

குண்டடம் அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா். மேலும், குழந்தைகள் உள்பட 3 போ் படுகாயமடைந்தனா்.

குண்டடம் அருகே விபத்துக்குள்ளான காா்.

Updated On :

திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா். மேலும், குழந்தைகள் உள்பட 3 போ் படுகாயமடைந்தனா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் விஜயராஜா (42). இவரது மனைவி கவிதா (39). இவா்களது மகன் சாய்சரண் (14), மகள் கீா்த்திசனா (10) ஆகியோருடன் திருப்பூா், முதலிபாளையம் பகுதியில் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் விஜயராஜா பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊா் சென்றுவிட்டு, மதுரையில் இருந்து காரில் திருப்பூா் நோக்கி வந்து கொண்டிருந்தனா்.

தாராபுரம்-திருப்பூா் சாலை, குண்டடம் அருகே நால்ரோடு பகுதியில் புதன்கிழமை காலை வந்து கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பில் மோதி அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உடனடியாக அக்கம்பக்கத்தினா் வந்து காயமடைந்தவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கவிதா உயிரிழந்தாா்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜயராஜா மற்றும் சாய்சரண், கீா்த்திசனா ஆகியோா் திருப்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.