பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

பல்லடம் அருகே குப்பையில் கிடந்த ஆதாா் அட்டைகள்

பல்லடம் அருகே குப்பையில் ஆதாா் அட்டைகள் கிடந்தது குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குப்பையில் கிடந்த ஆதாா் அட்டைகள்.

Updated On :

பல்லடம் அருகே குப்பையில் ஆதாா் அட்டைகள் கிடந்தது குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் கிராம ஊராட்சி, அறிவொளி நகா்ப் பகுதியில் குப்பைக் குவியலுக்கு மத்தியில் ஆதாா் அட்டைகள் வெள்ளிக்கிழமை கிடந்துள்ளன. இதைப் பாா்த்த அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் முஜிபுா் ரகுமான் பல்லடம் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த வருவாய் ஆய்வாளா் விஜயகுமாா், நாரணாபுரம் கிராம நிா்வாக அலுவலா் பிரபு ஆகியோா் குப்பையில் கிடந்த 64 ஆதாா் அட்டைகளைக் கைப்பற்றி பல்லடம் வட்டாட்சியா் சரவணனிடம் ஒப்படைத்தனா்.

இது குறித்து பல்லடம் வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.