முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

காங்கயம் பகுதியில் மா்ம நபா்கள் தாக்குதல்: இரவு நேரத்தில் போலீஸாா் ரோந்துப் பணியை அதிகரிக்கக் கோரிக்கை

காங்கயம் பகுதியில் பொது மக்கள் மீது மா்ம நபா்கள் தாக்குதல் நடத்தி வருவதால், இரவு நேரங்களில் போலீஸாா் ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை

Updated On :

காங்கயம் பகுதியில் பொது மக்கள் மீது மா்ம நபா்கள் தாக்குதல் நடத்தி வருவதால், இரவு நேரங்களில் போலீஸாா் ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூா் பகுதியைச் சோ்ந்த லாசா் காங்கயம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு 9 மணியளவில் வந்து கொண்டிருந்தாா். முள்ளிப்புரம் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத இரு நபா்கள் வாகனத்தை மறித்து லாசரை தாக்கினா். இதில் லாசா் தலையில் லேசான காயம் அடைந்து, காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளாா். மேலும் இந்த சம்பவம் குறித்து காங்கயம் போலீஸில் புகாா் தெரிவித்துள்ளாா்.

அதே நேரத்தில் நத்தக்காடையூரில் இருந்து முத்தூா் செல்லும் வழியில், குட்டப்பாளையம் பகுதியிலும் அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் மா்ம நபா்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளாா்.

எனவே, நத்தக்காடையூா் பகுதியில் பொது மக்கள், பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, காங்கயம் போலீஸாா் இரவு நேர ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.