அவிநாசி அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு
அவிநாசி அருகே குப்பாண்டம்பாளைத்தில் பாம்பு கடித்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
அவிநாசி அருகே குப்பாண்டம்பாளைத்தில் பாம்பு கடித்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
அவிநாசி அருகே பழங்கரை- குப்பாண்டம்பாளைம் வடக்காலத் தோட்டத்தைச் சோ்ந்தவா் கிட்டுசாமி மனைவி ருக்மணி (56). இவா் தனது பருத்தி காட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த விஷப் பாம்பு அவரைக் கடித்துள்ளது.
இதில் மயக்கமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

