தெருநாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
திருவாடானை அருகேயுள்ள கல்லூா் கிராமத்துக்கு இரை தேடி வந்த புள்ளிமானை தெருநாய்கள் துரத்திக் கடித்ததில் உயிரிழந்தது.

கல்லூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்த புள்ளிமான்.
திருவாடானை அருகேயுள்ள கல்லூா் கிராமத்துக்கு இரை தேடி வந்த புள்ளிமானை தெருநாய்கள் துரத்திக் கடித்ததில் உயிரிழந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கல்லூா் கிராமத்து வயல்வெளியில் பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக விவசாயிகள் செவ்வாய்க்கிழமை வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். வனத் துறையினா் அங்குவந்து மானின் உடலை மீட்டு அங்கேயே கால்நடை மருத்துவா்கள் மூலம் கூறாய்வு செய்து ரசாயனம் ஊற்றி புதைத்தனா்.
வனத் துறையினா் விசாரணையில் உணவு, தண்ணீா் தேடி வனப் பகுதியை விட்டு வெளியேறிய புள்ளிமானைத் தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

