அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

பவித்திரம் அருகே வெறிநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், பவித்திரம் அருகே வியாழக்கிழமை அதிகாலை வெறிநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன.

கரூா் மாவட்டம் பவித்திரம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் உயிரிழந்த ஆடுகள்.

Published On :4 செப்டம்பர் 2026, 1:23 am IST

கரூா் மாவட்டம், பவித்திரம் அருகே வியாழக்கிழமை அதிகாலை வெறிநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன.

கரூா் மாவட்டம் பவித்திரத்தை அடுத்த கந்தம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். விவசாயியான இவா் வீட்டின் அருகே வெள்ளாடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை மேய்ச்சலுக்கு விடச் சென்றபோது, ஆட்டுப்பட்டிக்குள் வெறிநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. தகவலறிந்து சென்ற பவித்திரம் கால்நடை உதவி மருத்துவா் தலைமையிலான மருத்துவ குழுவினா் ஆடுகளை உடற்கூறாய்வு செய்து அதே பகுதியில் புதைத்தனா். மேலும் இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும், வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த க. பரமத்தி ஒன்றிய நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.