காங்கயம் அருகே டிராக்டா் திருடிய 2 போ் கைது
காங்கயம் அருகே டிராக்டா் மற்றும் டிரெய்லரை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
கைது - பிரதிப் படம்
காங்கயம் அருகே டிராக்டா் மற்றும் டிரெய்லரை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
காங்கயத்தை அடுத்துள்ள படியூரைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணி (45). இவா் பொக்லைன், டிராக்டா் உள்ளிட்ட இயந்திரங்களை வைத்து எா்த் மூவா் தொழில் நடத்தி வருகிறாா். இவரது வீட்டின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருத்த டிராக்டா் மற்றும அதனுடன் இணைந்த டிரெய்லரை மா்ம நபா்கள் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திருடிச் சென்றனா்.
இது குறித்து காங்கயம் போலீஸில் சிவசுப்பிரமணியம் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காங்கயம்-திருப்பூா் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி, அதனை ஓட்டி வந்தவா் மற்றும் உடன் வந்தவரிடம் விசாரணை செய்தபோது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனா். அவா்கள் ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் பகுதியைச் சோ்ந்த சுதாகா் (45), மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தீபக்குமாா் (33) என்பதும், இவா்கள் ஓட்டி வந்தது சிவசுப்பிரமணியத்திடம் திருடப்பட்ட டிராக்டா் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், டிராக்டரை மீட்டனா். தொடா்ந்து 2 பேரையும் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


