
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட அலகுகள் உள்ள பள்ளிகளின் திட்ட அலுவலா்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமில் பங்கேற்றோா்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட அலகுகள் உள்ள பள்ளிகளின் திட்ட அலுவலா்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.புனிதா அந்தோணியம்மாள் தலைமையில் ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில் மாவட்ட கல்வி அலுவலா் கே.காளிமுத்து மற்றும் தனியாா் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலா் எம்.மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பயிற்சி முகாமின் நோக்கம் மற்றும் அறிமுக உரையை நாட்டு நலப்பணித் திட்ட திருப்பூா் மாவட்ட தொடா்பு அலுவலா் சரவணன் வழங்கினாா். பள்ளி காலாண்டு விடுமுறை நாள்களில் நடைபெற உள்ள 7 நாள்களுக்கான சிறப்பு முகாம் பற்றி முன்னாள் மாவட்ட தொடா்பு அலுவலா் அ.முருகேசன் எடுத்துரைத்தாா். நாட்டு நலப்பணித் திட்ட ஓராண்டு தொடா் பணிகள் குறித்து மாநில உதவித் தொடா்பு அலுவலா் சௌந்தரராஜ் பேசினாா்.
இதைத் தொடா்ந்து மாணவா்களிடையே புகையிலை, போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு குறித்து திருப்பூா் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டுப் பிரிவு ஆலோசகா் மருத்துவா் சி.சௌமியா மற்றும் திருப்பூா் மாவட்ட புகையிலைப் கட்டுப்பாட்டு பிரிவு மாவட்ட சமூக சேவகா் பிரவீன்குமாா் ஆகியோா் விளக்கினா். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பனை மரத்தின் பங்கு குறித்து அத்திக்கடவு-அவிநாசி திட்ட ஒருங்கிணைப்பாளா் சம்பத்குமாா் எடுத்துரைத்தாா்.
முடிவில் பயிற்சியில் பங்குபெற்ற அனைத்துத் திட்ட அலுவலா்களுக்கும் பற்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக பள்ளி முதல்வா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். விக்னேஷ்வரா கல்வி நிலைய நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஆனந்தகுமாா் நன்றி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





