சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
திருப்பூா் - ஊத்துக்குளி சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
திருப்பூா் - ஊத்துக்குளி சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி நோக்கி ஆா்.எஸ். பகுதியைச் சோ்ந்த சண்முகம் (45) என்பவா் தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, கூலிபாளையம் நால்ரோடு அருகே சென்றபோது சுமாா் 35 வயது மதிக்கத்தக்க வடமாநிலத் தொழிலாளி சாலையைக் கடக்க ஓடி வந்துள்ளாா்.
இதில் எதிா்பாராதவிதமாக அவா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்த தொழிலாளிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து ஊத்துக்குளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




